Showing posts with label tamil. Show all posts
Showing posts with label tamil. Show all posts

Monday, 12 January 2015

உச்சி போய் காதல் வா !



எப்படி கூறியும் எடுத்துரைக்க  இயலவில்லை;
சுரக்கும் வேதியலின் வெட்ப விருட்சம், 
காதல் இல்லை என !!

ஏடு சேரா எழுத்துக்களின் எண்ணம் 
திசையற்றிருப்பது திண்ணம் எனில்
நீ நீருள் தவளை !!

இவன், இவள், இன்பம், இருப்பு,
கண்டறிய கண் போதும் 
காற்றெதற்கு ??

திளைப்பில் தீ கூட தித்திப்பு.
மனம் பேசும் மென்மொழி, 
மனம் கேளா தேகம்.

இலக்கணமற்ற புணர்ச்சிக்கு,
இடமளிக்க புரிதல் ஏதற்கு ?
அது தமிழ் இல்லை, தீங்கு.

என்னவன், என்னவள் என்கயில்,
நறைமுடி உச்சியின் வாசம் வரின்,
நீ காதலிக்கிறாய் ! :)

Friday, 31 October 2014

மஞ்சள் பூ மரத்தடியில்.



 



மழைப்பெய்த மரத்தடியில், 
மனம் நனைக்கும் சிற்றோடை. 
மஞ்சள் நிறப் பறவையொன்று 
     கடலுக்குள் குதித்தது போல், 
மயங்கிக்கிடக்கும் மஞ்சள் பூக்கள். 

கடக்கத்துடிக்கும் என் கால்களை- 
காந்தமாய் கட்டிக்கொண்ட காட்சி.
சிலப் பூக்கள் சிரித்திருக்க, 
    சிலப் பூக்கள் கண்ணீருடன்.
சிலிர்க்க செய்யும் மென்காற்றும்,
சிந்தை விரும்பும் கலவையாய்.

விழிக்குடை மூடாமல் அகல அகல- 
வியப்பிற்க்கு வியாபாரம் பேசும் விந்தை.
துளிகள் நனைக்கையில் இப்பூ- 
துணையாய் இருந்திருக்கக்கூடும் - மரத்திற்கு.

உதிர்வதை உணராமல் இல்லை-மரமும் பூவும்.
உற்றதும், உருவேற்பதும் உடனிருக்கையில், 
உமிழ்ந்துவிட்ட வாடா பூக்களுக்கு, 
உயிர் இருந்திருக்கலாம், இருக்கலாம்! 

Thursday, 30 October 2014

திருத்தம் கோரும் தீபாவளி!





ஓசோனில் ஓட்டை ,
ஒன்றுமறியா பறவைக்குஞ்சு, 
ஒழுங்கற்ற சுற்றுச்சூழல், 
ஒருவித மனக்கசப்பு .

உறவினர் ஒன்றுபட;
உறுதியாக்கும் பிணைப்பு பெற;
உள்ளம் திளைத்திருக்க; 
உருவானதொரு பண்டிகை. 

நல்லோர்கள் ஒன்றுபடாமல்,  
நட்சத்திர அம்ச வீடுகளில், 
நச்சு பணமும் பகட்டுமாக, 
நலிந்து விட்ட திருவிழா. 

தீப ஒளி திருநாளை,
தீபாவளி என மருவச்செய்து,
தீ- பாவம் - அழி என்று பொருட்படச்செய்து,
தினரச்செய்கிறோம் நம் தலைமுறையை. 

கைபேசிக்கு தள்ளுபடி; 
கண்கவரும் ஆடைகள்; 
கமகமக்கும் பலகாரம்; 
கட்டுப்பட்டாசு- இவை நம் தீபாவளி. 

சிறு வயிறு சுருங்கி ,
சீற்றத்தின் சிறைதனலில், 
சிதையுண்டும் சினங்கொண்டும் ,
சிற்றார்கள் எத்தனையோ. 

புகைவீச்சு தாளாமல், 
புண்ணாகும் ஐந்தறிவின் ,
புதைக்கப்படும் ஓலங்களை ,
பொருட்படுத்தாத ஆறறிவு. 

அணி வகுக்கும் இயந்திரங்களுக்கு -
அளவில்லாமல் காசோலை எண்ணுகையில், 
அடுத்த வேளைக்கு சில்லறை தேடுபவனை- 
அன்றேனும் எண்ணுங்கள்!

மனம் மகிழ தீபங்கள் ஏற்றி, 
மண்மணத்தை மாசுபடுத்தாது, 
மற்றவருக்கு கொடுத்துதவி ,
நாம் பறக்கவிடும் பணக்கட்டில்- 
ஒரு பங்கேனும் பகிர்ந்தளிப்போம்.

மரணம் கடந்த மகத்துவம், புரியும்!


-நன்றி-


Wednesday, 8 October 2014

நடுநிசியில் பறக்கும் மஞ்சள் பட்டம்!




விரிந்து கிடக்கும் வயல் வரப்பு
விடிவதரியாது விழித்திருக்க, 
வான் நோக்கி காற்று கடத்த 
வழிமொழிய வாய்ப்பின்றி உயர உயர.. 

வினை செய்து பெயர் பெற்று, 

வினையெச்சத்தின் எச்சங்களாய்,
வியபூட்டும் பெயரேச்சங்களின் 
வருகைக்கு நாள் பார்த்து- 

காணாது  போன  கடவுச்சொல்லொன்று 

கல்லெறியும் தெரு மனிதன்பால் சிக்கிவிட, 
கடல் வரை பார்க்க முடிந்தும் 
கண்ணற்ற களவு போல்.

மெய்யிநூடே பொய் - அது உயிராகி,

பொய்யினுள் புதைத்த உயிர்மெய்களாய் -
கைக்குட்டை நனைய கண்ணுதிர்த்து 
செய்வதரிந்தும் விம்மி நின்று.. 

ழகரம் உணர்ந்த ஊமையொன்று ;

காதலறிந்த குருட்டு விழியொன்று ;
இசை சுவைத்த கேளா செவியொன்று ;
மூளைக்குள் ஞாலம்- ஞானமில்லை!

காரியமாய் கணித்து விடப்பட்ட இவ்வேளைகளில்,

கண் சொருகும் காரணமாய்  மிதந்து, 
இந்நடுநிசியில் மேலே சென்று, 
ரசனைக்கும் ரசவாதம் பூசி ..

படபடக்கும் மென்மஞ்சள் பட்டம்!!



Tuesday, 3 June 2014

காதல் கதை!




"சொல்" என சிணுங்கி சிரிக்கும் குழந்தையிடம்,
மேலும் மறுக்க வழியின்றி,
மேலோட்டமாய் சொல்ல துவங்குகிறாள் அம்மா.
'அப்பாவும் நானும்' காதல் கதையை!

சந்தித்த நொடியில் சிந்திக்க மனமின்றி 
இதயங்கள் பரிமரியதம்!

எண்ணத்தில் கண்டவள் என்னவளானால் 
என அப்பா நினைத்தாராம்!

கனவில் கண்டவன் காதலனா 
என அம்மா மகிழ்ந்தளாம்!

அம்மியிருக்க, அருந்ததியிருக்க 
காதலன் கணவன் ஆனானாம்!

மனை, துணை, இணை என 
நாட்கள் நகர்ந்ததாம்!

பாசம் பாதி, காமம் மீதி 
என அவளும் பிறந்தாளாம்!

கதை கேட்டு,விழிகள் உருள,
ரசிதுக்கொண்டிருந்தவள் -
அறிந்திருக்க மாட்டாள்,

சட்டம், கட்டம், மட்டம் என பல 
திட்டங்கள், கனவுகளுக்கு கலவை பூசிய,
கதை புனைந்தவளின் சரித்திரத்தை!!




Tuesday, 18 February 2014

ஏ(ன்)மாற்றம் !!

வானம் பார்த்து வாய் பிளக்க,
கண்ணிமை பட்டுத்தெரிக்கும்  
மழைத்துளி !

புருவம் விரிந்து கையகல
விரலினைத்து  துருத்தி,'பே' எனும் 
நண்பன்!

இலையசய, கண்மூடி முகம் தர
சலனமற்று கடந்தே செல்லும் 
தென்றல்!

இதழ் குவித்து அருகில் வர,
கன்னம் காட்டி- அடி வைக்கும் 
குழந்தை!

சிகை கண்டு சட்டென முன்நோக்க,
சுருங்கசிரிக்கும், இளமை கடந்த 
பெண்!

அதிசயமாய் ஆழ படித்தும் 
மறந்தோ , மறுத்தோ  விடபட்டதொரு 
கேள்வி!

திருவிழா தாவணி தரிசனத்தில் 
முதற்கண் அழகு - ஒன்றுவிட்ட 
தங்கை!

தெரியாமல் செய்ய எண்ணி,
முன்னமே கேட்கப்படும் 
உதவி!

பளிச்சென புன்னகைத்தும்,
புரியாமல் புருவம் குருக்கும்  பால்ய 
சினேகம்!

வாரம் ஒன்றை திட்டமிட்டும்,
'வா' என உரக்கசொல்லும் 
விடுமுறை!

ஏராளமாய் சிருகச்செர்து ,
எண்ணுகையில் பூஜ்யம் குறையும்
உண்டியல்!

என, உயிர்குடி உடல் வளர்பு உலகத்தில்,
இச்சில ஏமாற்றங்கள், சினம் அல்ல-
சிரிக்கத்தான் வைகிறது!!



இனிய நாள்!!

Tuesday, 7 January 2014

நூலென்று...!


நூல் கண்டு, நுட்பம் கற்று
சேலை  வந்தது!
நூலொன்று நுட்பம் பெற 
சோலை வந்தது!

நூல் படித்த காரனத்தால் 
ஞானம் வந்தது!  
நூலளந்த எண்களினால் 
அளவு வந்தது !

நூலாக  நீர் பிரிய 
மாரி  வந்தது!
நூல் கொடுத்த சேதியிலே 
பருத்தி வந்தது!

நூலியற்ற ஆர்வம் கொண்டு 
கவிஞயர் வந்தது!
நூற்றையும்  நுநூறாய் 
நூலினைத்தது!

நூலினைத்த  காதலினால் 
உறவு வந்தது!
நூலொன்று தாயினைக்க 
நானும் வந்தது!

நூல் மறந்த உடல் கண்டு 
நோய்  புகுந்தது !
நூலோடு பொம்மயொன்று 
ஆடி வந்தது!

அந்நூல் போல் என்நூலந்த 
இறைவன் கொண்டது!
நூலென்ற சொல் ஒன்றே 
பல இணைத்து!!



Wednesday, 1 January 2014

ஊழ் உலகு !!



எங்கோ  எப்பொழுதோ -
எதேற்கென தெரியாமல்
எவ்வாறென  புரியாமல்
எட்டிதேரிக்கும் ஏகாந்தத்தில்
எத்தனையோ தேதிகளில் ,
எத்திசையும் கேள்ளிக்கை  பேசி ,
என்றாவது சமத்துவம் பேசி
எள்ளி அன்பு செய்து -
ஏசாது ஏய்க்க கற்று ,
ஏமாற்றி திரிகிறோம்!

இன்னொரு இடத்தில அங்கு -
இன்பத்தின் மொழி அறியா ,
இமை சிமிட்டும் நீர் துளியில்
இடிந்த நாட்களாய் நகன்று ,
இரகமற்ற  ஈனக்  கைப்பட்டு
இரவு கடந்தும் இரவோடோன்றி ,
இக்கணம் இறந்தால் சரி -
இயல்பென்ன  யாமரியோமென 
இரண்டிலிருந்து இந்நூரு வரை, 
இல்லாது நிலையுட்ட்றோர்!

கருப்புக்கும் வெண்மைக்கும், 
கலந்த நிறத்திற்கும் -
ஊழ்வினை உருட்டிய உலகமடா!!







Saturday, 8 December 2012

மனிதனானேன்!!




மழைத்துளியாய் நானிருந்தால் 
மரணகாலம் மறுநொடி என 
மண்ணோடு மறைதிருபேன் !!

மல்லிகையாய் மலர்ந்திருந்தால் 
மயங்கும் மனம் வீசி 
மறுநாளில் சருகாவேன் !!

மரமாக மண் துளைதிருந்தால் 
மாந்தர்க்கு நிழலாகி 
மம்மங்கு நின்றிருபேன் !!

மயிலாக மாதவம் கொண்டிருந்தால் 
மழை நேர மாலையிலே காட்சிதர 
கூண்டுக்குள் குமைந்திருபேன் !!

மானாக மண்  சேர்ந்தால் 
என்னிருள் நாள் ஒன்றில் 
மாற்றானுக்கு இறையாவேன் !!

இவ்வனைத்தும் பூல் இல்லை 
என் இப்பிறவி என 
கர்வம் கொண்டு,
மனிதனாய் பிரப்பெடுதேன் !!
காலம் நீண்டு...
கனவுகள் கண்டு...
ஆசைகளை அசைப்பூட்டு ... 
இன்று, முன்கூறிய ஐந்திடம் தங்கிய 
முப்பேரு  இல்லை என்னிடம்..

உண்மை !!
நிம்மதி!!
அமைதி!!

Sunday, 4 November 2012

பள்ளி நண்பன் !!

ஒன்றாம் வகுப்பின் ஓரத்தில்
ஒற்றை நாற்காலி;
இரண்டாம் வகுப்பின் இடதுபக்க
இடிந்த சுவர்;
மூன்றாம் வகுப்பின் முற்றத்தில்
துருபற்றிய கம்பி;
நான்காம் வகுப்பின் நடுவில்
காந்தி படம்;
என அனைத்தும் அப்படியே!
நீ மட்டும் ஏன் மாறிவிட்டாய் ??
அட...
நானும்தான்!!