விரிந்து கிடக்கும் வயல் வரப்பு
விடிவதரியாது விழித்திருக்க,
வான் நோக்கி காற்று கடத்த
வழிமொழிய வாய்ப்பின்றி உயர உயர..
வினை செய்து பெயர் பெற்று,
வினையெச்சத்தின் எச்சங்களாய்,
வியபூட்டும் பெயரேச்சங்களின்
வருகைக்கு நாள் பார்த்து-
காணாது போன கடவுச்சொல்லொன்று
கல்லெறியும் தெரு மனிதன்பால் சிக்கிவிட,
கடல் வரை பார்க்க முடிந்தும்
கண்ணற்ற களவு போல்.
மெய்யிநூடே பொய் - அது உயிராகி,
பொய்யினுள் புதைத்த உயிர்மெய்களாய் -
கைக்குட்டை நனைய கண்ணுதிர்த்து
செய்வதரிந்தும் விம்மி நின்று..
ழகரம் உணர்ந்த ஊமையொன்று ;
காதலறிந்த குருட்டு விழியொன்று ;
இசை சுவைத்த கேளா செவியொன்று ;
மூளைக்குள் ஞாலம்- ஞானமில்லை!
காரியமாய் கணித்து விடப்பட்ட இவ்வேளைகளில்,
கண் சொருகும் காரணமாய் மிதந்து,
இந்நடுநிசியில் மேலே சென்று,
ரசனைக்கும் ரசவாதம் பூசி ..
படபடக்கும் மென்மஞ்சள் பட்டம்!!
No comments:
Post a Comment