Tuesday, 3 June 2014

காதல் கதை!




"சொல்" என சிணுங்கி சிரிக்கும் குழந்தையிடம்,
மேலும் மறுக்க வழியின்றி,
மேலோட்டமாய் சொல்ல துவங்குகிறாள் அம்மா.
'அப்பாவும் நானும்' காதல் கதையை!

சந்தித்த நொடியில் சிந்திக்க மனமின்றி 
இதயங்கள் பரிமரியதம்!

எண்ணத்தில் கண்டவள் என்னவளானால் 
என அப்பா நினைத்தாராம்!

கனவில் கண்டவன் காதலனா 
என அம்மா மகிழ்ந்தளாம்!

அம்மியிருக்க, அருந்ததியிருக்க 
காதலன் கணவன் ஆனானாம்!

மனை, துணை, இணை என 
நாட்கள் நகர்ந்ததாம்!

பாசம் பாதி, காமம் மீதி 
என அவளும் பிறந்தாளாம்!

கதை கேட்டு,விழிகள் உருள,
ரசிதுக்கொண்டிருந்தவள் -
அறிந்திருக்க மாட்டாள்,

சட்டம், கட்டம், மட்டம் என பல 
திட்டங்கள், கனவுகளுக்கு கலவை பூசிய,
கதை புனைந்தவளின் சரித்திரத்தை!!




No comments: