நூல் கண்டு, நுட்பம் கற்று
சேலை வந்தது!
நூலொன்று நுட்பம் பெற
சோலை வந்தது!
நூல் படித்த காரனத்தால்
ஞானம் வந்தது!
நூலளந்த எண்களினால்
அளவு வந்தது !
நூலாக நீர் பிரிய
மாரி வந்தது!
நூல் கொடுத்த சேதியிலே
பருத்தி வந்தது!
நூலியற்ற ஆர்வம் கொண்டு
கவிஞயர் வந்தது!
நூற்றையும் நுநூறாய்
நூலினைத்தது!
நூலினைத்த காதலினால்
உறவு வந்தது!
நூலொன்று தாயினைக்க
நானும் வந்தது!
நூல் மறந்த உடல் கண்டு
நோய் புகுந்தது !
நூலோடு பொம்மயொன்று
ஆடி வந்தது!
அந்நூல் போல் என்நூலந்த
இறைவன் கொண்டது!
நூலென்ற சொல் ஒன்றே
பல இணைத்து!!
No comments:
Post a Comment