எங்கோ எப்பொழுதோ -
எதேற்கென தெரியாமல்,
எவ்வாறென புரியாமல்,
எட்டிதேரிக்கும் ஏகாந்தத்தில்,
எத்தனையோ தேதிகளில் ,
எத்திசையும் கேள்ளிக்கை பேசி ,
என்றாவது சமத்துவம் பேசி,
எள்ளி அன்பு செய்து -
ஏசாது ஏய்க்க கற்று ,
ஏமாற்றி திரிகிறோம்!
இன்னொரு இடத்தில அங்கு -
இன்பத்தின் மொழி அறியா ,
இமை சிமிட்டும் நீர் துளியில்.
இடிந்த நாட்களாய் நகன்று ,
இரகமற்ற ஈனக் கைப்பட்டு,
இரவு கடந்தும் இரவோடோன்றி ,
இக்கணம் இறந்தால் சரி -
இயல்பென்ன யாமரியோமென
இரண்டிலிருந்து இந்நூரு வரை,
இல்லாது நிலையுட்ட்றோர்!
கருப்புக்கும் வெண்மைக்கும்,
கலந்த நிறத்திற்கும் -
ஊழ்வினை உருட்டிய உலகமடா!!
No comments:
Post a Comment