Thursday, 30 October 2014

திருத்தம் கோரும் தீபாவளி!





ஓசோனில் ஓட்டை ,
ஒன்றுமறியா பறவைக்குஞ்சு, 
ஒழுங்கற்ற சுற்றுச்சூழல், 
ஒருவித மனக்கசப்பு .

உறவினர் ஒன்றுபட;
உறுதியாக்கும் பிணைப்பு பெற;
உள்ளம் திளைத்திருக்க; 
உருவானதொரு பண்டிகை. 

நல்லோர்கள் ஒன்றுபடாமல்,  
நட்சத்திர அம்ச வீடுகளில், 
நச்சு பணமும் பகட்டுமாக, 
நலிந்து விட்ட திருவிழா. 

தீப ஒளி திருநாளை,
தீபாவளி என மருவச்செய்து,
தீ- பாவம் - அழி என்று பொருட்படச்செய்து,
தினரச்செய்கிறோம் நம் தலைமுறையை. 

கைபேசிக்கு தள்ளுபடி; 
கண்கவரும் ஆடைகள்; 
கமகமக்கும் பலகாரம்; 
கட்டுப்பட்டாசு- இவை நம் தீபாவளி. 

சிறு வயிறு சுருங்கி ,
சீற்றத்தின் சிறைதனலில், 
சிதையுண்டும் சினங்கொண்டும் ,
சிற்றார்கள் எத்தனையோ. 

புகைவீச்சு தாளாமல், 
புண்ணாகும் ஐந்தறிவின் ,
புதைக்கப்படும் ஓலங்களை ,
பொருட்படுத்தாத ஆறறிவு. 

அணி வகுக்கும் இயந்திரங்களுக்கு -
அளவில்லாமல் காசோலை எண்ணுகையில், 
அடுத்த வேளைக்கு சில்லறை தேடுபவனை- 
அன்றேனும் எண்ணுங்கள்!

மனம் மகிழ தீபங்கள் ஏற்றி, 
மண்மணத்தை மாசுபடுத்தாது, 
மற்றவருக்கு கொடுத்துதவி ,
நாம் பறக்கவிடும் பணக்கட்டில்- 
ஒரு பங்கேனும் பகிர்ந்தளிப்போம்.

மரணம் கடந்த மகத்துவம், புரியும்!


-நன்றி-


1 comment:

Mahendran A Chinnappan said...

Enakkup pidiththa mudhal kavithai