மழைப்பெய்த மரத்தடியில்,
மனம் நனைக்கும் சிற்றோடை.
மஞ்சள் நிறப் பறவையொன்று
கடலுக்குள் குதித்தது போல்,
மயங்கிக்கிடக்கும் மஞ்சள் பூக்கள்.
கடக்கத்துடிக்கும் என் கால்களை-
காந்தமாய் கட்டிக்கொண்ட காட்சி.
சிலப் பூக்கள் சிரித்திருக்க,
சிலப் பூக்கள் கண்ணீருடன்.
சிலிர்க்க செய்யும் மென்காற்றும்,
சிந்தை விரும்பும் கலவையாய்.
விழிக்குடை மூடாமல் அகல அகல-
வியப்பிற்க்கு வியாபாரம் பேசும் விந்தை.
துளிகள் நனைக்கையில் இப்பூ-
துணையாய் இருந்திருக்கக்கூடும் - மரத்திற்கு.
உதிர்வதை உணராமல் இல்லை-மரமும் பூவும்.
உற்றதும், உருவேற்பதும் உடனிருக்கையில்,
உமிழ்ந்துவிட்ட வாடா பூக்களுக்கு,
உயிர் இருந்திருக்கலாம், இருக்கலாம்!