வானம் பார்த்து வாய் பிளக்க,
கண்ணிமை பட்டுத்தெரிக்கும்
மழைத்துளி !
புருவம் விரிந்து கையகல,
விரலினைத்து துருத்தி,'பே' எனும்
நண்பன்!
இலையசய, கண்மூடி முகம் தர,
சலனமற்று கடந்தே செல்லும்
தென்றல்!
இதழ் குவித்து அருகில் வர,
கன்னம் காட்டி- அடி வைக்கும்
குழந்தை!
சிகை கண்டு சட்டென முன்நோக்க,
சுருங்கசிரிக்கும், இளமை கடந்த
பெண்!
அதிசயமாய் ஆழ படித்தும்
மறந்தோ , மறுத்தோ விடபட்டதொரு
கேள்வி!
திருவிழா தாவணி தரிசனத்தில்
முதற்கண் அழகு - ஒன்றுவிட்ட
தங்கை!
தெரியாமல் செய்ய எண்ணி,
முன்னமே கேட்கப்படும்
உதவி!
பளிச்சென புன்னகைத்தும்,
புரியாமல் புருவம் குருக்கும் பால்ய
சினேகம்!
வாரம் ஒன்றை திட்டமிட்டும்,
'வா' என உரக்கசொல்லும்
விடுமுறை!
ஏராளமாய் சிருகச்செர்து ,
எண்ணுகையில் பூஜ்யம் குறையும்
உண்டியல்!
என, உயிர்குடி உடல் வளர்பு உலகத்தில்,
இச்சில ஏமாற்றங்கள், சினம் அல்ல-
சிரிக்கத்தான் வைகிறது!!
கண்ணிமை பட்டுத்தெரிக்கும்
மழைத்துளி !
புருவம் விரிந்து கையகல,
விரலினைத்து துருத்தி,'பே' எனும்
நண்பன்!
இலையசய, கண்மூடி முகம் தர,
சலனமற்று கடந்தே செல்லும்
தென்றல்!
இதழ் குவித்து அருகில் வர,
கன்னம் காட்டி- அடி வைக்கும்
குழந்தை!
சிகை கண்டு சட்டென முன்நோக்க,
சுருங்கசிரிக்கும், இளமை கடந்த
பெண்!
அதிசயமாய் ஆழ படித்தும்
மறந்தோ , மறுத்தோ விடபட்டதொரு
கேள்வி!
திருவிழா தாவணி தரிசனத்தில்
முதற்கண் அழகு - ஒன்றுவிட்ட
தங்கை!
தெரியாமல் செய்ய எண்ணி,
முன்னமே கேட்கப்படும்
உதவி!
பளிச்சென புன்னகைத்தும்,
புரியாமல் புருவம் குருக்கும் பால்ய
சினேகம்!
வாரம் ஒன்றை திட்டமிட்டும்,
'வா' என உரக்கசொல்லும்
விடுமுறை!
ஏராளமாய் சிருகச்செர்து ,
எண்ணுகையில் பூஜ்யம் குறையும்
உண்டியல்!
என, உயிர்குடி உடல் வளர்பு உலகத்தில்,
இச்சில ஏமாற்றங்கள், சினம் அல்ல-
சிரிக்கத்தான் வைகிறது!!
இனிய நாள்!!
2 comments:
மிகவும் அருமையான படைப்பு.... எதார்த்தத்தின் வெளிப்பாடு... எல்லோரும் ஒன்று அனால் கவிதைகளாய் இதை பார்க்கும்போது மிக நன்று.... வாழ்த்துக்கள் sowee
mikka nandri :)
Post a Comment